கோவை: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குப் பூ, காய்கறிகள், பழவகைகள், பால் என அத்தியாவசியப்பொருட்கள் தினசரி செல்கின்றன. பொள்ளாச்சி அருகே நடுப்புனி, கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், செம்பனாபதி ஆகிய இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. சோதனைச்சாவடிகளில் போலீசார், வனத்துறையினர், சுகாதாரத்துறையினர், உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து தனியாருக்குச்சொந்தமான அகிலா ட்ரான்ஸ்போர்ட் டேங்கர் லாரி, பொள்ளாச்சி வழியாக மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி சென்றபோது, பாலக்காடு மாவட்டத்தின் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் டேங்கர் லாரியில் இருந்த பால் சோதனை செய்தபோது பாலில் கொழுப்பு தன்மைக்காக யூரியா கலந்திருப்பது தெரியவந்தது.
லாரியில் இருந்த யூரியா கலந்த 12,750 லிட்டர் பாலை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சோதனைச் சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையாக சோதனை செய்து வருகின்றனர், அலுவலர்கள். இந்நிலையில் பாலில் யூரியா கலந்த சம்பவம் தமிழ்நாடு, கேரள எல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:அயோத்தி தீப உத்சவ்வில் லட்சக்கணக்கான தீபம் ஏற்றி கின்னஸ் சாதனைக்கு ஏற்பாடு