கரோனா பொது முடக்கத்தின் மத்தியில், கோவை மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அல்லும் பகலும் பாராது தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஒலம்பஸ் பகுதி 67ஆவது வார்டில் 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை அவர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டிருந்தபோது, சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வரும் பவுன்ராஜ் என்பவர் பணியிலிருந்தோரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர், சுகாதார ஆய்வாளர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - விசிக ஆர்பாட்டம்