ஆன்லைன் ரம்மி, ட்ரீம் லெவன் போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். அப்பொழுது, ஆன்லைன் ரம்மி விளம்பர போஸ்டர்களை தீ வைத்து எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக நீதிக் கட்சியின் தலைவர் பன்னீர், " தமிழ்நாட்டில் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணத்தை இழந்த 17 பேர் மனமுடைந்து உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடிகர், நடிகைகள், போன்றவர்களின் விளம்பரங்களை பார்த்தே மக்கள் ஏமாந்து வருகின்றனர். இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை கண்காணிப்பதற்கு சைபர் கிரைம் காவலர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'ஆன்லைன் கேமிங்'க்குத் தடை கோரிய வழக்கு - பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகைக்கு நோட்டீஸ்!