ETV Bharat / state

RTE: மூன்று ஆண்டுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் - தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கான அடுத்த மூன்றாண்டுகளுக்கு புதிய கட்டண விகிதங்களை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

rte-tn-government-releases-next-three-years-fee-structure-private-schools-condemns-this-move
RTE : மூன்று ஆண்டுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம் - சமூகநீதிக்கு உகந்தது அல்ல என தனியார் பள்ளிகள் கருத்து
author img

By

Published : Jun 23, 2023, 11:05 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் ஆரம்ப வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதுடன், விதவைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படிப்பதற்கு கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை பள்ளிக்கல்வித் துறை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.

அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி எல்கேஜி (LKG) முதல் எட்டாம் வகுப்பு வரை வருகிற 2026ஆம் ஆண்டு வரைக்கும் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 2020-2021ம் கல்வியாண்டில் LKG, UKG மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 12,458 ரூபாய், 2ஆம் வகுப்புக்கு 12,499 ரூபாய், 3ஆம் வகுப்புக்கு 12,578 ரூபாய், 4ஆம் வகுப்புக்கு 12,584 ரூபாய், 5ஆம் வகுப்புக்கு 12,831 ரூபாய், 6ஆம் வகுப்புக்கு 17077ரூபாய், 7ஆம் வகுப்புக்கு 17,106 ரூபாய், 8ஆம் வகுப்புக்கு 17027 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே உள்ள கட்டண விகிதத்தைக் காட்டிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சற்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2022 - 2023 கல்வி ஆண்டில் படித்த மாணவர்களில் LKG, UKG வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6,000, 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12,076, 6 முதல் 8 வகுப்பு வரை ரூ.15,711 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

2023 முதல் 2026 வரையில் 3 கல்வி ஆண்டிற்கான எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.6,000, 1 முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ரூ.12,659, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.16,477 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்விக்கட்டணம், தனியார் பள்ளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் வழங்கும்போது தங்களால் தொடர்ந்து கல்வி கற்பிப்பதில் சிரமம் ஏற்படும் எனவும், கூடுதலாக தேவைப்படும் கட்டணத்தை பெற்றோர்களிடம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும் கருதுகின்றனர்.

இது குறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் கூறும்போது, “கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் பயிலும் மாணவர்களுக்காக, அரசு வழங்கும் கல்விக் கட்டணத்தை அடுத்த 4 ஆண்டுகளுக்கு பாதியாக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டு உள்ளது.

அடுத்த 4 கல்வி ஆண்டுகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான தொகை அரசு வழங்குவதற்கான ஒரு மாணவருக்கான கல்வி கட்டணத்தை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் RTE பிரிவின் மூலம், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ மாணவியரின் கல்விக் கட்டணத்தை மாநில அரசு மூலம் மத்திய அரசு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது.

குறிப்பிட்ட பள்ளிக்கு தனியார் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட கல்விக் கட்டணம் அல்லது பள்ளிக் கல்வித்துறையால் அந்தந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்படும் ஒரு மாணவருக்கான செலவிடப்படும் தொகை எவ்வளவோ, அதனை அரசாணையில் நிர்ணயம் செய்யப்படும் தொகை, இதில் எது குறைவோ அது வழங்கப்படும். இதில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு LKG மற்றும் UKG மாணவர்களுக்கான கட்டணம் பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது LKG மாணவர்களுக்கு 2020- 2021ஆம் கல்வியாண்டில், ரூ.12,458.94 என இருந்ததை, 2021 - 2022இல் ரூ.12,076 ஆக குறைத்து கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஒரு மாணவருக்கான செலவுத்தொகை, அதிலும் பாதியாக அதாவது 2022 - 2023, 2023 - 2024, 2024 - 2025, 2025 - 2026 ஆகிய கல்வி ஆண்டுகளுக்கு எல்கேஜி மற்றும் யுகேஜிக்கான கட்டணம் வெறும் 6,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 2022 - 2023க்கான கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை அந்த கல்வி ஆண்டு முடிந்தவுடன் குறைத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசுப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் சராசரியாக ஆண்டிற்கு 30,000 ரூபாய் செலவிடும் நிலையில், அதை விட பலமடங்கு சிறந்த கல்வியை அளிக்கும் சுயநிதிப் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச்ச ட்டப்படி பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணமாக வெறும் 6,000 ரூபாய் வழங்குவது சமூக சமத்துவ நீதிக்கு உகந்தது அல்ல.

இந்த கட்டணக் குறைப்பால் இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால், கடந்த ஆண்டின் கட்டணங்களின் கட்டணத்தில் பாதி மட்டுமே அரசு வழங்குவதால், மீதிக் கட்டணத்தை அம்மாணவனின் பெற்றோரிடத்தில்தான் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆகவே, பாதிக்கப்படப்போவது இத்திட்டத்தில் படிக்கும் ஏழை மாணவர்களின் பெற்றோர்களே.

அனைத்துத் துறைகளிலும் சமத்துவத்தை கடைபிடிக்க நினைக்கும் தமிழ்நாடு அரசு, பள்ளிக்கல்வித் துறையின் இந்த செயலை எப்படி அனுமதிக்கிறது என தெரியவில்லை. உடனடியாக இந்த அரசாணையை திரும்பப் பெற்று, கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை விட சிறிது உயர்த்தி அல்லது அதே தொகையையாவது கடந்த ஆண்டுகளைப்போல், அந்தந்த ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் நிர்ணயம் செய்து வெளியிட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.