ETV Bharat / state

தீபாவளி வாகன நெரிசலை தடுக்க ஏற்பாடு.. கோவை மாநகர காவல்துறை அறிக்கை! - coimbatore traffic control

Coimbatore police: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன நிறுத்துமிடங்களை அறிவித்து விதிகளை மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Report by Coimbatore Police to prevent Diwali traffic congestion
தீபாவளி வாகன நெரிசலை தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிக்கை!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 12:07 PM IST

கோயம்புத்தூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகர காவல்துறை சார்பில் குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்தங்களை அறிவித்துள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பொது மக்கள் புதிய ஆடைகள் மற்றும் இதர பொருட்களை வாங்கும் பொருட்டு கோவை ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர்.

இவ்வாறு வரும் பொது மக்கள் தங்கள் வாகனங்களை ஒப்பணக்கார வீதி மற்றும் கிராஸ்கட் ரோடு பகுதிகளுக்குள் வந்து வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் வாகன நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு கோவை மாநகராட்சியால் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில், வாகனங்களை நிறுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 1. பாலக்காடு ரோடு பொள்ளாச்சி ரோடுகளிலிருந்து ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோரின் வாகனங்களும் மற்றும் திருச்சி ரோட்டிலிருந்து ஒப்பணக்கார வீதி செல்லும் வாகனங்கள் சுங்கம் வாலாங்குளம் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் சென்று, உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு கீழ் உள்ள காலி இடத்தில் கோவை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதிகளுக்கு நடந்து செல்ல வேண்டும்.

2. பேரூர் ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து ஒப்பணக்கார வீதி மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்வோரின் வாகனங்கள் ராஜவீதி மற்றும் பெரிய கடைவீதி சந்திப்பு அருகில் உள்ள மாநகராட்சி வாகனம் நிறுத்தும் இடத்தில் கட்டணம் செலுத்தி தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும்.

3. மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, திருச்சி ரோடுகளிலிருந்து கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள கடைகளுக்கு செல்வோரின் வாகனங்கள் வடகோவை மேம்பாலம் கிராஸ்கட் ரோடு அருகில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் கோவை மத்திய சிறைச்சாலை மைதானத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கிராஸ்கட் ரோட்டிற்கு நடந்து செல்ல வேண்டும்.

4. உக்கடத்திலிருந்து R.S.புரம் மேட்டுப்பாளையம், தடாகம் ரோடு செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள், ஒப்பணக்கார வீதியை தவிர்த்து, வைசியாள் வீதி, சலிவன் வீதி காந்திப்பார்க் சென்று, செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.

5. காந்திபுரத்திலிருந்து கிராஸ்கட் ரோடு வழியாக வடகோவை மேம்பாலம் செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் கிராஸ்கட் ரோட்டை தவிர்த்து, 100 அடி ரோடு Power House ரோடு வழியாக வடகோவை மேம்பாலம் சென்று மேட்டுப்பாளையம் ரோடு செல்லலாம் அல்லது சிவானந்தா காலனி வழியாக மேட்டுப்பாளையம் செல்லலாம்.

ஒப்பணக்கார வீதி மற்றும் காந்திபுரம் கிராஸ்கட் ரோடுகளுக்கு சென்று பொருட்களை வாங்கிய பின் வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திற்கு வந்து தங்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தாங்கள் விரும்பும் சாலையில் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மேற்கண்ட வாகன நிறுத்தங்கள் மற்றும் தனியார் வாகனம் நிறுத்த இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தாமல், பொது இடங்களில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் சட்டப்படி
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை வைத்து பாலியல் தொழில்! பெண் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை - நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.