ETV Bharat / state

கரோனா காலத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியில் பிரதமர் மோடி தனி விமானத்தில் பயணம்? - பி.ஆர்.நடராஜன் எம்பி குற்றச்சாட்டு - Coimbatore District Development

PR Natarajan MP: அரசு அழைப்பிதழில் தனது பெயரை போடாமல் புறக்கணிப்பதாகவும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய கரோனா நிதியில் பிரதமர் மோடி தனி விமானத்தில் பயணம் செய்ததாகவும் கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 9:17 PM IST

கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்க வில்லை என குற்றச்சாட்டு

கோவை: அதிமுக தொடர் வெற்றி பெறும் தொகுதியாக இருப்பதால் கோவையை புறக்கணிப்பதாகவும், கோவை மாவட்ட ஆட்சியர் இல்லாமல் கண் துடைப்புக்காக வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்ததாகவும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான ரூ.500 ஆயிரம் கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.31) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் ஜெயராமன், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ச்சுனன், சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் இல்லாத கூட்டம்; கண் துடைப்பு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், 'மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மனவேதனை அளிக்கிறது எனவும், அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனவும், பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை என்றார். மேலும், கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இது இருந்தது' எனவும் விமர்சித்தார்.

அதிமுக வெற்றி பெற்ற கோவை தொகுதியை, புறக்கணிக்கும் திமுக அரசு: கோவை மாவட்டம் தொடர்ந்து புறகணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது ஒன்று எனவும் சாடினார். மேலும், அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும், மீண்டும் அதிமுக வெற்றி பெரும் என்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை என்றார். அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.500 ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளனர் என தெரிவித்தார். மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே உதாரணமாக உள்ளது எனவும் 'அத்திகடவு குடிநீர் திட்டம்' இன்னும் நிறைவேற்றபடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஆளுநர் குறித்த கேள்வி எழுப்பியது நன்றி வணக்கம்' என பதில் அளித்து சென்றார்.

ஜனநாயகத்தை பற்றி பேச யோகியதை கிடையாது: பின்னர் பேசிய பேசிய பி.ஆர்.நடராஜன் எம்பி, 'கூட்டத்தில் எம்மாதிரியான திட்டங்கள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தும், அதிமுக எம்எல்ஏக்களையும் அதிக அளவில் இருப்பதால் கோவை புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு, கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் வருடம் அதிமுக ஆட்சியில் நான் எம்பியாக இருந்தபோதும் சரி, தற்போதும் சரி ஒரு அரசு விழாவுக்கும் என்னை அழைக்கவில்லை என குற்றம்சாட்டினார். ஜனநாயகத்தை பற்றி பேச இவர்களுக்கு யோகியதையே கிடையாது என சாடிய அவர், அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை எந்த அரசு விழா அழைப்பிதழிலும் எனது பெயரைப் போடவில்லை என மேலும் குற்றம்சாட்டினார்.

அழைப்பிதழில் பெயரைப் போடாமல் அரசியல் செய்வோர் வெட்கப்பட வேண்டும்: இப்போது மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் அனைத்திலும் அவர்கள் பெயர் இடம்பெறுவதைக் கண்டு அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும் எனக் கூறினார். நாம் செய்ய தவறியதை திமுக அரசின் நிர்வாகம் செய்கிறது என அவர்கள் வெட்கப்பட வேண்டும் என விமர்சித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, இந்தக் கூட்டத்திற்கு நான் தான் சேர்மன், நான் இல்லையென்றால் துணை சேர்மன் ஆக பொள்ளாச்சி எம்பி செயல்படுவார். மாவட்ட ஆட்சியர் இக்குழுவுக்கு செயலாளர், மாவட்ட ஆட்சியர் இல்லையென்றால் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சப்-கலெக்டர் கூட்டத்தை நடத்தலாம் என வழிகாட்டு நெறிமுறைகளே உள்ளது எனக் கூறினார்.

கரோனா காலத்தில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதியில் பிரதமர் மோடி விமானத்தில் பயணம்?: 5 ஆண்டுகள் பதவியில் இருந்த சூழலில் வருடத்திற்கு ரூ.5 கோடி அவற்றில் 18% ஜிஎஸ்டியாக, அதாவது ரூ.90 லட்சம் ஜிஎஸ்டியாக சென்று விடுகிறது. ரூ.4 கோடியே 10 லட்சம் தான் பணம் கிடைக்கும் என அவர் தெரிவித்தார். 3 ஆண்டுகள் மட்டுமே நிதி கொடுக்கப்பட்டதாகவும், இரண்டு ஆண்டுகள் நிதியை கரோனா பெயரைச் சொல்லி பிரதமர் எடுத்துக்கொண்டு தனி விமானம் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டுள்ளார் என விமர்சித்தார். ஆனால், அந்த நிதி தமிழ்நாட்டுக்கு வர வேண்டியது எனவும், மொத்தம் ரூ.17 கோடிகள் இந்த 5 ஆண்டுகளில் தமக்கு வழங்கப்பட்டதாகவும்; அந்த ரூ.17 கோடிக்குமான பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் எம்பி நடராஜன் கூறினார்.

நீதிமன்ற உத்தரவு படி விரைவில் தீர்வு: தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த மற்றும் அவர்கள் கேட்ட தொகை வருவதற்கு உண்டான வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் நகலை கொடுத்துள்ளோம். மாநில அமைச்சரகத்தின் இடத்தில், இதனைப் பேசி பரிசீலித்து அமலாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுப்பதாக மாநகராட்சி ஆணையரும் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: "தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்" - வெளியுறவு இணை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.