ETV Bharat / state

அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது - செந்தில் பாலாஜி விளக்கம்! - power cut during amit shah entry

வேலூரில் பாஜகவின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது ஏற்பட்ட மின் தடை சர்ச்சையை கிளப்பிய நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

Power outage during Amit Shah's visit was accidental - Senthil Balaji
அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின் தடை தற்செயலானது- செந்தில் பாலாஜி
author img

By

Published : Jun 12, 2023, 9:52 PM IST

அமித்ஷா வருகையின்போது ஏற்பட்ட மின்தடை தற்செயலானது - செந்தில் பாலாஜி

கோயம்புத்தூர்: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கடைகள் கட்டுதல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முதலமைச்சர் 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி இருந்தார். அந்த நிதியில் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகள் முடிந்து அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் 260 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 578 கி.மீ. சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மின் கட்டண உயர்வை பொருத்தவரை அரசு மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளது. வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்றும் விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறினார். மின் கட்டணத்தில் வணிக நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய‌ அரசின் அறிவுறுத்தலின் படி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஒபிஎஸ் தானும் இருக்கிறேன் என்பதை காட்ட அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒபிஎஸ் வீட்டில் மின்தடை‌ ஏற்பட்டதா? அவரது தோட்டத்தில் ஏற்பட்டதா? என கேள்வி எழுப்பிய அவர் தமிழ்நாட்டில் எங்கும் மின் தடை இல்லை. சீராக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசியலுக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மின்தடை என குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர் என கூறினார்.

பாமக தலைவர் அன்புமணிக்கு அவர் அளித்த பதிலில் "ஆண்டிற்கே 45 ஆயிரம் கோடி தான் மது விற்பனை நடக்கிறது.‌ எப்படி 2 இலட்சம் கோடி இழப்பு ஏற்படும்? என கூறினார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்க சில கருத்துக்கள், அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். அரசியலுக்கான‌ சொல்லப்படும் கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை என்றும் கூறினார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது மேலும் அதிகாரிகள் கேட்ட ஆவணங்களை கொடுத்துள்ளனர். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள் என தெரிவித்தார்.

அமித்ஷா வருகையின் போது சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்பட்டது என விளக்கமளித்த அவர், எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: 2023-ஆம் ஆண்டில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு: கோவை ஈஷா பவுண்டேஷன் திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.