ETV Bharat / state

3 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு - ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள்

கோவை: ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களான முகமது உசேன், ஷேக் சபியுல்லா, ஷாஜகான் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி போத்தனூர் காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

isis
author img

By

Published : Jun 25, 2019, 4:42 PM IST

கோவையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஷேக் சபியுல்லா, ஷாஜகான் ஆகியோருக்கு அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, அவர்களின் வீடுகளில் போத்தனூர் காவல் துறையினர் சோதனை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை அடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திவரும் ஜிகாத் காட்சிகளின் வீடியோ கிலாபத் சித்ரா ஆகியவை பற்றிய Pdf கோப்புகள் தமிழாக்கம் செய்து வருவதாகவு குறிப்பிட்டுள்ளனர். மேலும், கோவை மாநகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தைக் காட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி, ஜிகாதி சித்தாந்தங்கள், கொள்கைகளுக்கு எதிரானவர்களை கொலை செய்து மத ரீதியான பதற்றத்தை உருவாக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த தனி அறிக்கையின் மீது வழக்குப்பதிவு செய்த போத்தனூர் காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் முகமது உசேன், ஷேக் சபியுல்லா, ஷாஜகான் ஆகியோரை எட்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

Intro: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் முகமது உசேன், ஷேக் சபியுல்லா,ஷாஜகான் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி போத்தனூர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். Body:கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் முகமது உசேன், ஷேக் சபியுல்லா,ஷாஜகான் ஆகியோருக்கு அவ்வமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர்களின் வீடுகளில் போத்தனூர் போலீசார் சோதனை நடத்தியதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.இதனை அடுத்து அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.மேலும் முதல் தகவல் அறிக்கையில்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தி வரும் ஜிகாத் காட்சிகளின் வீடியோ கிலாபத் சித்ரா ஆகியவை பற்றிய pdf file கள் தமிழாக்கம் செய்து வருவதாகவும் அவற்றை பகிர்ந்து வருவதாகவும் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர். மேலும்
கோவை மாநகரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பலத்தை காட்டவும் பாடம் போட்டோவும் இவர்கள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி பொதுமக்களை கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் மதரீதியான பதற்றமான கோவையில் ஜிகாதி சித்தாந்தங்கள் கொள்கைகள் நம்பிக்கைகளுக்கு எதிரான அவர்களையும் நுண்ணறிவு பிரிவுகளில் உள்ள பலரையும் கொன்று மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் உருவாக்க முடிவு செய்திருக்கிறார்கள் என தெரியவருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் உதயகுமார் கொடுத்த தனி அறிக்கையின் மீது வழக்குப்பதிவு செய்த போத்தனூர் போலீசார் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் முகமது உசேன், ஷேக் சபியுல்லா,ஷாஜகான் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 3 பேரிடமும் 8 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்க கோரி போத்தனூர் காவல்துறையினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்
8 நாள் போலீ்ஸ் காவலில் அனுமதிக்க கோரும் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகின்றது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.