கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தொடர்பான சம்பவம்தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்தியச் சிறையில் உள்ளனர். மேலும், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிபிசிஐடி காவல் துறையினர் முக்கியக் குற்றவாளியான திருநாவுக்கரசை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், குற்றவாளி திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார்மார்ச் 25ஆம் தேதிக்குள் கோவையில் உள்ள சிபிசிஐடி காவல் துறையிடம் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.