ETV Bharat / state

பட்டு உற்பத்தி பாதிப்பு; பொள்ளாச்சி விவசாயிகள் வேதனை!

கோவை: பொள்ளாச்சியில் வெண்பட்டுக்கூட்டில் ஊசி ஈ தாக்குதலால், நாளுக்கு நாள் உற்பத்தி குறைந்துவருவதாக பட்டு விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Aug 25, 2019, 3:26 PM IST

pollachi mulberry silk farming

கோவையில் பொள்ளாச்சி அருகே உள்ள கூழநாயக்கன்பட்டி, கோமங்கலம், கோலார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டு விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தி செய்துவருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டு கூடுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் உடுமலை, கோவை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நல்ல விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக, பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பட்டுப்புழு மீது ஊசி ஈ அதிகளவு தாக்குதல் செய்துவருவதால் பட்டுப்புழு உற்பத்தித் திறனை இழந்து வருவதோடு, இறந்துபோகின்றன இதனால் பட்டுக்கூடு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நூறு பட்டுப்புழு முட்டைகள் நூறு கிலோவுக்கு மேல் பட்டுக்கூடு உற்பத்தி செய்துவந்த நிலையில் தற்போது 50 கிலோ கிடைப்பதே சிரமமாக இருக்கிறது. இதனால் உற்பத்தி செய்யும் செலவு அதிகரித்து, லாபம் குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

வெண்பட்டுக் கூடு உற்பத்தி பாதிப்பால், சந்தையில் அதனை மிக குறைந்த விலையில் விர்பனை செய்வதாக கூறும் விவசாயிகள் பட்டுப்புழுவை தாக்கும் ஊசி ஈயை அழிக்க வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டு விவசாயி ராஜன் பேட்டி

Intro:pattuBody:pattuConclusion:பொள்ளாச்சியில் உற்பத்தி செய்யபடும் வெண் பட்டுக்கூடு நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் ஊசி ஈ தாக்குதல் காரணமாக உற்பத்தி பாதிப்பு - நாளுக்கு நாள் உற்பத்தி குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை

பொள்ளாச்சி - ஆகஸ்ட் - 25

பொள்ளாச்சி அருகே உள்ள கூழநாயக்கன்பட்டி, கோமங்கலம், கோலார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் வெண் பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகின்றனர், இங்கு உற்பத்தி செய்யப்படும் வெண்பட்டு கூடுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் உடுமலை, கோவை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடுவண் கொள்முதல் நிலையங்களில் நல்ல விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது, இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பட்டுப்புழு மீது ஊசி ஈ அதிகளவு தாக்குதல் செய்ததால் பட்டுப்புழ உற்பத்தி திறனை இழந்து வருவதோடு, செத்தும் வருவதால் பட்டுக்கூடு உற்பத்தி பாதியளவு குறைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர், 100 பப்டுப்புழு முட்டைகள் 100 கிலோவுக்கு மேல் பட்டுக்கூடு மட்டுமே உற்பத்தி செய்து நிறையில் நிலையில் தற்போது 50 கிலோ கிடைப்பதே சிரமம் இருப்பதாகவும், இதனால் உற்பத்தி செய்யும் செலவு அதிகரித்து, லாபம் குறைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர், தற்போது சந்தையில் வெண்ப்பட்டுக்கூடு ரூ.400முதல் ரூ.500 வரை விலை கிடைக்கும் இந்த நேரத்தில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்ட வருவதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர் எனவே பட்டுப்புழுவை தாக்கும் ஊசி ஈ யை அளிக்க வேளாண்மைத்துறை சார்பில் மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும் மேலும் பட்டுக்கூடு உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பேட்டிராஜன்,வெண்பட்டுக்கூடு உற்பத்தியாளர், கூழநாயக்கன்பட்டி.(Etv பாரத் சிறப்பு செய்தி)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.