பொள்ளாச்சியை அடுத் கிணத்துகடவில் 75 கோடி மதிப்பிலான ஐந்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளின் கட்டுமானப் பணிகளுக்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழ்நாடு அரசின் நிதிநிலைக்கு ஏற்ற வகையில் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் இரண்டு மடங்கு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் பொருளாதாரம் பாதிக்காமல் இருக்கவே வேலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் வேலைக்குச் செல்லுங்கள்.
அதிமுகவை அதன் தொண்டர்கள்தான் வழிநடத்துகிறார்கள். ஆனால், திமுகவை பிரசாந்த் கிஷோர் வழிநடத்துகிறார். பெரியார், அண்ணா வகுத்துக்கொடுத்த கொள்கை வழியில் அதிமுக செயல்படுகிறது. ஆகவே வரும் 2021ஆம் தேர்தலில் அதிமுகவிற்கு மக்கள் அமோக வெற்றியைத் தருவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: அத்திக்கடவு நீரேற்று நிலைய பூமி பூஜை; சிறப்பித்த சட்டப்பேரவை சபாநாயகர்