உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராசாமணி, "கோயம்புத்தூரில் 12 ஊராட்சி ஒன்றியத்திற்கு இருகட்டமாகத் தேர்தல் நடைபெறுகின்றது. இதற்காக 12 ஆயிரத்து 836 பேர் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நன்னடத்தை விதிகள் பொருந்தும். பதற்றமான இடங்கள் என 84 இடங்களிலுள்ள 214 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் காவலர்கள், சிசிடிவி பொருத்தப்பட்டு காணொலிப் பதிவு செய்யப்படும். தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்கும் தேர்தல் தொடர்பான புகார்களை 18005 996000 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
மேலும், 2301587 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம். பதவிகளை ஏலம்விடுவது தொடர்பாகப் புகார்கள் கோவை மாவட்டத்தில் ஏதுமில்லை. அவ்வாறு தகவல் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடைபெறும் 16 சோதனைச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள ஆனைக்கட்டி பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் கூடுதல் காவலர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போலி ஆதார் கார்டு மூலம் பணம் மோசடி - உஷாரா இருங்க மக்களே!