ETV Bharat / state

உண்டு-உறைவிடப் பள்ளியிலிருந்து மாயமான பழங்குடியின சிறுவன்! - Police investigae the missing boy

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் உள்ள பழங்குடியின பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் காணாமல்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

child missing
author img

By

Published : Aug 19, 2019, 11:50 AM IST

Updated : Aug 19, 2019, 12:12 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் உலா நிதி வனச்சரகம் குமட்டி செட்டில்மென்ட்டியைச் சேர்ந்த பழங்குடியின மாணவன் விஷால், அங்குள்ள பழங்குடியின மாணவர் உண்டு-உறைவிடப் பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு படித்துவருகிறான்.

அப்பள்ளியில் மாணவர்கள் 35 பேரும் மாணவியர் 27 பேரும் என மொத்தம் 62 பேர் தங்கி கல்வி பயின்றுவருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை உணவருந்தும் நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த விஷால் திடீரென காணவில்லை.

இந்நிலையில் காணாமல்போன மாணவனைத் தேடும் பணியில் அந்தப் பள்ளியில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களும் வனத் துறையைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தேடிய நிலையிலும் நேற்று மாலை 5 மணிவரை விஷாலை கண்டுபிடிக்க முடியாததால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வனஜா, மாணவனின் பெற்றோர் கண்ணன்-மனோன்மணி ஆகியோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விஷாலை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

டாப்சிலிப்
பள்ளியிலிருந்து மாயமான சிறுவன்

Intro:missingBody:missingConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் சிறுவன் மாயம், வனத்துறையினர் தேடுதல் பணி . பொள்ளாச்சி-19 பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் உலா ந்தி வனச்சரகம் குமட்டி செட்டில்மென்ட் யை சேர்ந்த பழங்குடியின மாணவர் விஷால்ஆவார் ,இவர் டாப்சிலிப்பில் உள்ள பழங்குடியின மாணவர் உண்டு உறைவிடப் பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் அப்பள்ளியில் மாணவர்கள் 35 பேரும் மாணவிகள் 27 பேரும் என மொத்தம் 62 பேர் இப்பள்ளியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் நேற்று மாலை உணவுஅருந்தும் நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த மாணவன் திடீரென காணாமல் போய் இருக்கிறார் அவரை தேடும் பணியில் அந்த பள்ளியில் பணியாற்றுகிற நிரந்தர ஆசிரியர்கள் இரண்டு பேரும் தற்காலிக ஆசிரியர்கள் 3 பேரும் அவர்களுடன் வனத் துறையைச் சார்ந்தவர்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் இன்று மாலை 5 மணி வரை பள்ளி மாணவன் விஷால் என்பவர் காண கிடைக்காத தால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வனஜா மற்றும் மாணவனின் பெற்றோர் கண்ணன் மனோன்மணி ஆகியோர் ஆனைமலை காவல் நிலையம் வந்து நிலைய ஆய்வாளரிடம் புகார்அளித்துள்ளனர், தொடர்ந்து விஷாலை தேடும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
Last Updated : Aug 19, 2019, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.