ETV Bharat / state

“சட்டம் ஒழுங்கு சீர்குலைய தமிழக அரசே காரணம்” - ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் - coimbatore latest news in tamil

CP Radhakrishnan: ஆளுநர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Cp Radhakrishnan byte
சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 7:48 AM IST

சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அரசே காரணமாக இருக்கிறது. தவறு செய்பவர்களைக் கண்டிக்காமல், அவர்களை அரவணைக்கும் போக்குதான் தமிழக அரசிடம் காணப்படுகிறது என்றும், இது கண்டனத்திற்குரியது எனவும் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழக அரசும், திமுகவும் வரலாற்று தவறுகளில் இருந்து சரியான படிப்பினை கற்றுக் கொள்ள வேண்டும். 1998 தொடர் வெடிகுண்டு சம்பவம் 42 உயிர்களை கோவை இழந்தது, கொலை பாதகத்தைச் செய்தவர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்துவதும், அவர்களை அரசே அரவணைப்பதும் கண்டணத்திற்குரியது.

அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பதும், அதற்கு அண்ணா பெயரை பயன்படுத்துவதும் சரியானது அல்ல. இதனால்தான் இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய தமிழக அரசே காரணமாக இருக்கிறது. தவறு செய்பவர்களை கண்டிக்காமல், அவர்களை அரவணைக்கும் போக்குதான் தமிழக அரசிடம் காணப்படுகிறது. இது கண்டனத்திற்குரியது. அரசு இதனை திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆரியம் திராவிடம் எங்கே இருக்கின்றது? திமுக எதையாவது சொல்லிக் கொண்டே இருக்கும். வேண்டாத விவாதங்களை கிளப்பி, தங்களுக்கு அரசியல் லாபத்தை தேடிக்கொள்வது திமுகவின் வாடிக்கை. சனாதனத்தை எதிர்ப்பதாகச் சொன்னார்கள். தேவையில்லாத ஒன்றை பேசுவதை விட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்தில் கவனத்தைச் செலுத்துவது முதல்வர் ஸ்டாலினுக்கு நல்லது.

ஆரியம், திராவிடம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருப்பது, தேவையில்லாதவற்றை பேசி மக்களது கவனத்தை திசை திருப்பப்படுகின்றது. ஒட்டுமொத்த தமிழகமும், கூலிப்படையின் செயல்களுக்குள் இருக்கின்றது.

கஞ்சா போதை பொருள் அதிகமாக வியாபாரம் செய்யப்படுகின்றது. இதை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை கவனத்தைச் செலுத்த வேண்டும். கஞ்சா, தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும். டி.ஆர்.பாலு, ஆளுநர் குறித்து விமர்சிப்பதை விட்டு, தமிழக ஆளுநரைப் பயன்படுத்தி மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் ஆய்வை செலுத்த வேண்டும்.

தமிழரை பிரதமராக்க வேண்டும் என்பவர்களுக்கு, மோடியை பிரதமராக்கக் கூடாது என்ற ஆதங்கம்தான் வெளிப்படுகிறது. மோடியை எல்லா தமிழர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஒரு தலித்தை முதல்வராக மாற்றி முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு தேவையா, இல்லையா என்பதை காலமும், சமூகமும் முடிவு செய்யும். சைலேந்திரபாபு மற்றும் சங்கரய்யா ஆகியோரது கோப்புகள் நிறுத்தி வைத்திருப்பது குறித்து அடுத்த முறை தமிழக ஆளுநரைச் சந்திக்கும் பொழுது, இது குறித்து அவரிடம் பேசவுள்ளேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆளுநருக்கு பாதுகாப்பில்லை; IPC 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபிக்கு ஆளுநர் மாளிகை கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.