ETV Bharat / state

அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூடக்கோரி பாமகவினர் மனு!

கோயம்புத்தூர்:  அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை உடனடியாக மூடக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பாமகவினர் மனு அளித்துள்ளனர்.

kovai
author img

By

Published : Nov 19, 2019, 1:44 AM IST

கோவையில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சூளை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் சூளைகளை மூட 15 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டது. ஆனால், கால அவகாசம் கொடுக்காமல் சூளைகளை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலரிடம் பாமகவினர் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய கோவை பாமக இளைஞர் அணி பொது செயலாளர் அசோக், "கோவையில் ஸ்ரீநிதி செங்கல் சூளைகள் மண்ணிற்காக பஞ்சமி நிலத்தில் மண் எடுத்து வருகிறது. செங்கல் சூளையை நடத்த வேண்டுமென்றால் உச்ச நீதிமன்ற ஆணை, தேசிய தீர்ப்பாய ஆணை, சுற்றுச்சூழல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை, கனிம வளத்துறை, சுரங்க துறை போன்ற துறைகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

கோயம்புத்தூர் பாமகவினர்

ஆனால் இங்கு பல சூளைகள் அதனை பின்பற்றாமல் மண் எடுத்து வருகின்றன. இதுபோன்ற சட்டவிரோத சூளைகளுக்கு கால அவகாசம் கொடுக்காமல் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று - பாமக தலைவர் ஜி.கே. மணி

Intro:செங்கல் சூளைகளை உடனடியாக மூட கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு.Body:அரசு அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை உடனடியாக மூட கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் பாமக கட்சியினர் மனு அளித்தனர்.

அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட மாவட்ட ஆட்சியர் செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புள்ளனர். அவர்களுக்கு மூட 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு கால அவகாசம் தராமல் மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.

இதை பற்றி பெசிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொது செயலாளர் அசோக் ஸ்ரீநிதி செங்கல் சூளைகள் மண்ணிற்காக பஞ்சமி நிலத்தில் மண் எடுப்பதாகவும் அது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்காது என்றும் கூறினார். செங்கல் சூளையை நடத்த வேண்டுமென்றால் உச்ச நீதிமன்ற ஆணை தேசிய தீர்ப்பாயத்தின் ஆணைப்படி சுற்றுச்சூழல் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வனத்துறை கனிம வளத்துறை, சுரங்க துறை போன்ற துறைகளிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் ஆனால் பல சூளைகள் அதை பின்பற்றாமல் மண் எடுத்து வருகிறது என்றும் அப்படிப்பட்ட சூளைகளுக்கு கால அவகாசம் தராமல் மூட வேண்டும் என்றும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.