கோவை சின்ன தடாகம் பகுதி பாப்பநாயக்கன் பாளையம் செல்லும் வழியில், சாலையோரம் மூதாட்டி ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர் யார் என்று விசாரிக்கையில், அந்த மூதாட்டி அதே பகுதியைச் சேர்ந்த நீலாவதி (70) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலில் ஏற்பட்ட காயங்களை வைத்து, அவர் யானை தாக்கி உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாகன விற்பனையில் புரட்சியை ஏற்படுத்த உள்ள இ-பைக்!