ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு சம்பவம்; இதுவரை 13 பேர் கைது.. சூடுபிடித்துள்ள என்ஐஏ விசாரணை! - கோவை உக்கடம்

Coimbatore car blast: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்ரீஸ் மற்றும் அசாருதீன் ஆகியோரை கோவை அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore car blast news
கோவை கார் வெடிப்பு சம்பவம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 3:56 PM IST

கோயம்புத்தூர்: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று அதிகாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம் நகரைச் சார்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலிக் குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டபோது, சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், ஐஎஸ்ஐஎஸ் (ISIS) தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேசா முபின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் என்ஐஏ தெரிவித்தது.

மேலும், இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், அதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதிச் செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜமேசா முபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதற்கட்டமாக முகமது அசாருதீன், முகமது தல்கா, பெரோஸ், முகமது ரியாஸ், நவாஸ் மற்றும் அப்சர்கான் ஆகிய 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து இவ்வழக்கில் மீதமுள்ள உமர் பாரூக், பெரோஸ் கான், முகமது தௌபீக், ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 5 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கோவை உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவருக்கு, இவ்வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 12-வது நபராக முகமது இத்ரீஸ் என்பவரையும், 13-வது நபராக அசாருதீன் என்பவரையும் கைது செய்தனர்.

இதில் அசாருதீன் கொச்சி சிறையில் வேறு ஒரு வழக்கில் இருப்பதும், சிறையில் இருந்தபடி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருப்பதும் தெரிய வந்தது. இந்நிலையில், இறுதியாக கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரியில் அனுமதி கேட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து இருவரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இருவரின் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பின்னர் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுடன் சந்தித்த இடங்களிலும் விசாரணை மேற்கொண்டனர். இரு வாகனங்களில் இத்ரீஸ் மற்றும் அசாருதீன் ஆகிய இருவரையும் அழைத்து வந்துள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் ஐடி நிறுவனங்களில் திடீர் வருமான வரி சோதனை- காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.