கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த முத்தூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திவாசன் (20). இவர் 12ஆம் வகுப்பு படித்து விட்டு, நீட் தேர்விற்காக தயாராகிவந்தார். முன்னதாக மூன்று முறை நீட் தேர்வு எழுதி தோல்வியுற்ற இவர், தற்போது நான்காவது முறை தேர்வெழுதியுள்ளார். தேர்வின் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கீர்த்திவாசன் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி இந்த முறையும் தோல்வியடைந்து விடுவேனோ என மனவருத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று (அக்.29) மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு தனது தாயார் வளர்மதியிடம் தான் விஷம் குடித்ததாக கூறியுள்ளார்.
![neet student suicide neet student neet neet student commit suicide suicide தற்கொலை நீட் தேர்வு நீட் தேர்வில் தற்கொலை நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13500348_suicide.jpg)
இதையடுத்து கீர்த்தி வாசனை மருத்துவ சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கீர்த்திவாசன் உயிரிழந்தார்.
தற்போது மாணவர் கீர்த்திவாசனின் உடல், உடற்கூராய்விறகாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆஸி சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே மாலெட் காலமானார்!