கோயம்புத்தூர் : கோவை நகரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் 20க்கும் மேற்பட்ட நபர்களின் தொடர்புடைய வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் GMநகர், உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம், ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தமமூன் அன்சாரி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படும் நிலையில் அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : TNPSC : அரசு பணியாளர் தேர்வில் புதிய நடைமுறைகள்.. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!