மக்களவைத்தேர்தலை ஒட்டி பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய அனுமதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஜிஎஸ்டி ஆய்வாளர் மலர்விழி தலைமையில் கோவை மக்களவைத்தொகுதிக்கு உட்பட்ட சூலூரை அடுத்த காரணம்பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு தனியார் வங்கி ஏடிஎமிற்கு கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக , விசாரணை மேற்கொண்டதில் அந்த பணம் கோவையில் இருந்து பல்லடத்தில் உள்ள இரண்டு ஏடிஎம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.