கோயம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நேற்று மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில், காந்தியின் 75 ஆவது நினைவு நாளை முன்னிட்டு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம், தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் சார்பில் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையுரையாற்றினார். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், காந்தியின் அணுகுமுறை முதல் இனப் பாகுபாட்டை எதிர்த்தல் வரையில் அவரது ஆளுமை குறித்து பேசினார்.
மதங்களை கடந்து மனிதம் பேசும் மனிதநேயத்தை கரோனா கால கட்டத்தில் அனைவரும் தெரிந்த கொண்டதாகவும், கரோனா கால கட்டத்திற்கு பிறகு மனிதநேயம் அதிகதிரித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன், பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் எம் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தேசியக் கல்வி கொள்கையால் மட்டுமே இலக்கை அடைய முடியும் - ஆளுநர் ஆர்.என். ரவி