தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவரும் திரைப்பட நடிகருமான மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல்செய்துள்ளார்.
கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடலாம் என தான் வந்ததாகவும், அங்கு கமல் போட்டியிடுவதால், அவருக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் தனிப் புலி எனவும், தனக்கு முன்னால், பின்னால் யாரும் இல்லை, தொண்டனே தலைவன், தலைவனே தொண்டன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகுதி மக்களின் கோரிக்கையை ஒரு வருடத்தில் செய்து கொடுக்காவிட்டால், உடனே பதவியை ராஜினாமா செய்துவிடுவதாகத் தெரிவித்த அவர், கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாஜகவின் பீ டீம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.