கோவை ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணதாஸ்(எ) பாலாஜி (40). இவர், சமூக வலைதளங்களில் இருந்து சிறுவர் சிறுமியர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதனை கே.பாலாஜி பாபு பாலா என்ற பெயரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் கிருஷ்ண தாசை விசாரணை செய்ததில் அவர் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது உறுதியானது.
இதையடுத்து காவல் துணை ஆய்வாளர் முத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காட்டூர் காவல்துறையினர் பால கிருஷ்ண தாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.