கோயம்புத்தூர் ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவர் பிளமேடு பகுதியில் யுனிவர்சல் என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். "ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் நான்கு லட்சம்" திருப்பி தரப்படும் என்று இணையத்தில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தை கண்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநில மக்களும் இவர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் தலைமறைவாகிய நிலையில், இவர் நிறுவத்தில் முதலீடு செய்தவர்கள் பலரும் கோவை பீளமேட்டில் உள்ள இவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து பீளமேடு காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகிய கெளதமை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சேலம் காவல் துறையினர் சேலத்தில் தலைமறைவாக இருந்த கெளதமை பிடித்து கோவைக்கு அழைத்து வந்தனர். கேரளாவிலும் இவர் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த மக்கள் இவரை பிடிக்க கோரி கேரள காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து, இவரை பிடித்த தகவலறிந்த கேரள காவல் துறை டிஎஸ்பி சியாம் கோவைக்கு வந்து பீளமேட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து ஹார்ட் டிஸ்க், போன்ற ஆவணங்களை கைப்பற்றி கெளதமை கேரளாவிற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க...'எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' - ராஜ்நாத் சிங்