குரங்கு அருவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையில் தடுப்பு கம்பி வேலி, பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து அதனை புதுப்பிக்கும் பணிக்காக வனத்துறை சார்பில் ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேற்று தடுப்பு கம்பி வேலி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது பணியினை தொடங்கி வைத்து பார்வையிட்ட வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரங்கு அருவியியில் தடுப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்தது. வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வேலி அடித்துச் செல்லப்பட்டது ஆகவே குரங்கு நீர்வீழ்ச்சியை புதுப்பிக்க வனத்துறை சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.