கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று(பிப்.1) கோவை தெற்கு மண்டலம் 94ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப்போட்டியிட உள்ள சக்திவேல் (45) என்பவர் குனியமுத்தூர் மண்டல அலுவலகத்தில் கரோனா கவச உடை அணிந்து வந்து மனுதாக்கல் செய்தார். இவரைக் கண்ட அலுவலர்கள், பொதுமக்கள் வியப்படைந்தனர்.
கரோனா தொற்றுப் பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்று உடை அணிந்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
இவரின் வித்தியாசமான மனுதாக்கல் முறையைப் பொதுமக்கள் கண்டு ஆச்சரியமடைந்தனர். மேலும் இவர் கரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை அப்பகுதி மக்களுக்கு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டம்மி ரூபாய் நோட்டுகளுடன் வந்து மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்!