ETV Bharat / state

Video:கோவையில் அரிவாளைக்காட்டி ரூ.10 லட்சத்தைப்பறிக்க முறன்ற இளைஞர்கள்! - Tasmac Supervisor Vijay Anand

கோவை அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி, ரூ.10 லட்சம் பணம் பறிக்க இளைஞர்கள் முயன்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் பட்டா கத்தியை காட்டி சூப்பர்வைசரிடம் பணம் பறிக்க முறன்ற இளைஞர்கள்!!!

author img

By

Published : Nov 1, 2022, 3:16 PM IST

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எண்-1811 செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர்வைசராக உதகையைச்சேர்ந்த விஜய் ஆனந்த்(46) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம் போல் கலெக்சன் பணம் ரூ.10 லட்சத்தை, தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்குச்சென்றுள்ளார். அப்போது, சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே வந்து கொண்டிருந்தபோது, பல்சர் மற்றும் கே.டி.எம் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜய் ஆனந்த்தை பின்தொடர்ந்து, இருசக்கரவாகனம் மீது மோதி கீழே விழச்செய்தனர்.

பின்னர் அவர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வீச்சரிவாள் காட்டி மிரட்டி, பணத்தை கொள்ளையடிக்க இளைஞர்கள் முயற்சி செய்துள்ளனர். இதனைப் பார்த்த சிலர் அக்காட்சியை வீடியோவாக பதிவு செய்தனர்.

எனினும், யாரும் அதைத் தடுக்க முற்படவில்லை. இதனிடையே கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால் நான்கு இளைஞர்களும் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Video:கோவையில் அரிவாளைக்காட்டி ரூ.10 லட்சத்தைப்பறிக்க முறன்ற இளைஞர்கள்!

இதே நபரிடம் கடந்த ஜூலை மாதம் பணத்தைப் பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத்தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஐந்துமாடி கட்டடத்தில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.