அதிக உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உடல் பருமனுக்கு எதிரான தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் உடல் பருமன், வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை சார்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
இதில் பி.எஸ்.ஜி. கல்வி குழுமங்களைச் சேர்ந்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைகளைக் கோர்த்து உடல் பருமன் தகவல்கள், அதனால் ஏற்படும் அபாயங்கள், சமூகத்தில் தேவையான உணவு மாற்றங்கள் என பல்வேறு உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியபடி மனித சங்கிலியாக நின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலமுருகன், தற்போது உடல் பருமன் அதிகரிப்பு உலக அளவில் மிகப்பெரிய ஆரோக்கியம் சார்ந்த பிரச்னையாகவும் இவற்றை குறைப்பதில் முதல் கட்டமாக சரியான உணவு முறையும், நல்ல உடற்பயிற்சியும் தேவை எனவும் கூறினார்.
இதையும் படியுங்க: