ETV Bharat / state

சிறுமிகளிடம் அத்துமீறி நடந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது - Government school teacher arrested for violating minor girls

கோவை: காட்டம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் சிறுமிகளிடம் அத்துமீறி நடந்ததாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

pollachi_bosco
pollachi_bosco
author img

By

Published : Feb 13, 2020, 6:53 PM IST

நெகமம் அடுத்த காட்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்படுகிறது. இதில் 20 வயதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாகாளியப்பன் (52) என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதில் மாகாளியப்பன் கடந்த சில நாட்களாக நான்காம் வகுப்பு, ஜந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது.

இதை அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்க பெற்றோர் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்றுள்ளதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த துறை அலுவலர்கள், பெற்றோர்களிடம் நீங்கள் முறையாக விண்ணப்பம் கொடுத்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி இரவு திடீரென பெற்றோர்கள் திருப்பூர் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள காட்டம்பட்டி பேருந்து நிலையம் அருகே சாலைமறியல் செய்தனர், இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கத்தினர் மனு அளித்தனர். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பினர் ராதாமணி கொடுத்த புகரின் பேரில் நெகமம் காவல்துறையினர் காட்டம்பட்டி அரசு பள்ளி தலைமையாசிரியர் மாகாளியப்பன் சிறுமிகளிடம் அத்துமீறி நடந்ததாக வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு முறைகேடு - ஆதார் ஆணைய உதவியை நாடிய சிபிசிஐடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.