கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதியில் ஒரு நபர் வீடு வீடாகச் சென்று நியாயவிலைக் கடை அரிசியை வாங்கிக் கொண்டிருப்பதாக சிறுமுகை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீடு வீடாகச் சென்று நியாயவிலைக் கடை அரிசியை வாங்கிய நபர் காவல் துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
பின்னர் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், 2 டன் நியாயவிலைக் கடை அரிசி பறிமுதல்செய்யப்பட்டது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அன்னூர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (37) என்பதும் அரசுப் பேருந்து ஓட்டுநர் என்பதும் தெரியவந்தது.
மேலும், நியாயவிலைக் கடை அரிசியை வீடு வீடாகச் சென்று குறைந்த விலைக்கு வாங்கி அன்னூர் பகுதியில் உள்ள மாவு அரைவு நிலையங்களுக்குச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்துவந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் தங்கராஜ், 2 டன் நியாயவிலைக் கடை அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியோர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து குற்றப்புலனாய்வுத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அரசுப் பேருந்து ஓட்டுநரே நியாயவிலைக் கடை அரிசியை கடத்தியது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரேஷன் அரிசியைக் கடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது: 2 டன் அரிசி பறிமுதல் - நியாயவிலைக் கடை
கோவை: நியாயவிலைக் கடை அரிசியை கடத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு, இரண்டு டன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.