சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவையில் முகாமிட்டுள்ளார்.
அந்த வகையில், இன்று காலை தனது பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின், இன்று மாலை வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில், ஸ்டாலினின் வருகைக்கு எதிராக, ‘கோ பேக் மோடி’ ஸ்டைலில், ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை பாஜக மற்றும் இந்து முன்னணியின் தொண்டர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.