ETV Bharat / state

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது - தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை

கோவையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் கைது

author img

By

Published : Mar 13, 2023, 7:49 PM IST

கோவை: இடையர் வீதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி கௌதம், சியாமல் கட்டுவா ஆகியோர் தனது நண்பர்கள் தன்மாய் ஜனா, ஜெகத் ஆகியோருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் ஞாயிற்றுகிழமை மாலை தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் கௌதம், சியாமல் கட்டுவா மற்றும் அவருடன் வந்த தன்மாய் ஜனா ஆகியோருக்கு வழிவிடாமல் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த 4 பேர் கைது

இதனையடுத்து சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை தாக்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், பானிபூரி கடையில் இருந்த மோனோ, ஷேக சவான் என்ற மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இரு புலம் பெயர் தொழிலாளர்களையும் சூரிய பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த நபர்கள் தாக்கி உள்ளனர். இந்த தகவல் கிடைத்து மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து கௌதம், சியாமல் கட்டுவா இருவரும் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் இந்து முன்னணியை சேர்ந்த சூரிய பிரகாஷ், பிரகாஷ் மற்றும் கல்லூரி மாணவர்கள் பிரகதீஷ், வேல்முருகன் ஆகிய 4 பேரையும் கைது செய்த வெரைட்டி ஹால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர் மீது தாக்குதல் நடத்துவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் வட மாநில புலம் பெயர் தொழிலாளர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் கோவையில் மேற்கு வங்க தொழிலாளர்களை தாக்கியதாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஷார்ஜாவில் இருந்து நூதன முறையில் தங்கம் கடத்தல்.. கோவையில் குருவி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.