ETV Bharat / state

பிஎஃப் பண மோசடி: பேராயர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு! - csi church

15 ஆண்டுகளாக சிஎஸ்ஐ ஆலய ஊழியர்களின் பிஎஃப் பணத்தை தராமல் மோசடி செய்ததாக சிஎஸ்ஐ பேராயர் உட்பட நான்கு பேர் மீது கோவையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

forgery case filed four person include csi church father in covai
பிஎஃப் பண மோசடி: பேராயர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு!
author img

By

Published : Apr 22, 2021, 2:26 PM IST

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் பாதிரியார் கோவை குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், "கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மண்டல சிஎஸ்ஐ ஆலய நிர்வாகத்தின் கீழ் நான் பணியாற்றி வருகிறேன். அன்றிலிருந்து வருகால வைப்பு நிதி தொகையை சிஎஸ்ஐ அலுவலகத்தில் செலுத்தி வருகிறேன்.

தற்போது வருங்கால வைப்பு கணக்கு குறித்து கேட்டபோது, அலுவலக தரப்பில் இருந்து முறையான விவரம் தரப்படவில்லை. கடந்த ஆண்டில் இருந்து மட்டுமே கணக்கு காண்பிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக வருங்கால வைப்பு தொகையை செலுத்தி வந்த நிலையில் சிஎஸ்ஐ நிர்வாகம் ஒரு ஆண்டிற்கு மட்டுமே கணக்கு காண்பித்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

forgery case filed four person include csi church father in covai
சிஎஸ்ஐ சர்ச்

மேலும், இந்த மண்டலத்திற்கு கீழ் 125 தேவாலயங்கள் செயல்பட்டு வருகின்றன. என்னைப் போல் பலரது வருங்கால வைப்பு நிதியில் இருந்து ரூ. 25 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இவரது புகாரின் அடிப்படையில் சிஎஸ்ஐ பேராயர் திமோத்தி ரவீந்தர், முன்னாள் செயலாளர் சார்லஸ், ஆலோசகர் மங்கள் தாஸ், பொருளாளர் செல்வகுமார் ஆகிய நான்கு பேர் மீது நம்பிக்கை மோசடி, கூட்டுச் சதி, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: எமர்ஜென்சி நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை: முதல்வர் நிர்மலா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.