பொள்ளாச்சி பாலக்காடு ரோடு அருகே உள்ள பொன்மலையூர் சுரேஷ் என்பவருக்குச் சொந்தமாக தனியார் தோட்டம் ஒன்று உள்ளது. இந்நிலையில், வனத்தை விட்டு வெளியேறி தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளிமான் ஒன்று, இவரது தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த கிணற்றில் எதிர்பாராவிதமாக விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.
பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் துணை கள இயக்குநர் ஆரோக்கிய சேவியர் உத்தரவின்படி பொள்ளாச்சி வனச்சரகத்தைச் சேர்ந்த காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் தனியார் தோட்டத்துக்கு வந்தனர். அங்கு கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த புள்ளிமானைக் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
இதனைத்தொடர்ந்து சர்க்கார்பதி அடர் வனப்பகுதியில் புள்ளிமானை வனத்துறையினர் விட்டனர்.
இதையும் படிங்க: பச்சிளம் பெண் குழந்தை குளக்கரையோரம் மீட்பு!