ETV Bharat / state

வால்பாறை அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி!

College students death in valparai: கோயம்புத்தூரில் இருந்து வால்பாறைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 10:48 PM IST

வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி

கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள நேரு கலைக் கல்லூரியில் மற்றும் அக்ஷ்யா பொறியியல் கல்லூரியை சார்ந்த மாணவர்கள் 10 பேர், 5 இருசக்கர வாகனத்தில் வால்பாறை மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று உள்ளனர். மதியம் கீரின் ஹில் (Green Hill) ஹோட்டலில் உணவு அருந்தி விட்டு, முடீஸ் அருகே உள்ள நல்லகாத்து ஆற்றில் குளிக்க சென்று உள்ளனர்.

அப்போது ஆற்றில் குளிக்கச் செல்லும் போது எதிர்பார விதமாக சுழலில் சிக்கி, நீருக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் வால்பாறை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட உடல்களை கைபற்றிய காவல் துறையினர், வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கல்லூரி மாணவர்கள் உடன் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய ஐந்து பேர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காருக்குள் கட்டுகட்டாக பணம்.. பெண் அதிகாரியை சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.