ETV Bharat / state

மகன் மரணத்தில் சந்தேகம்: மருமகள் மீது மாமனார் புகார் - பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

கோயம்புத்தூர்: மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மருமகள் மீது மாமனார் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

மகன் மரணம்
மகன் மரணம்
author img

By

Published : Oct 27, 2020, 8:43 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜக்கார்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருக்கு சிலம்பரசன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சிலம்பரசன் அதே ஊரை சேர்ந்த மீனா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்துவந்தார். இந்நிலையில் மீனாவிற்கும், அருண்குமார் என்பவருக்கும் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிலம்பரசன் மீனாவை பலமுறை எச்சரித்துள்ளார். இருப்பினும் மீனாவும் அருண்குமாரும் அதனைச் சட்டை செய்யவில்லை.

இதனால் மன உளச்சலுக்கு ஆளான சிலம்பரசன் நேற்று (அக்டோபர் 26) வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்த நெகமம் காவல் துறையினர் சிலம்பரசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சிலம்பரசன் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மீனா அவரது காதலன் அருண்குமார் மீது கிருஷ்ணசாமி காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

மேலும் சிலம்பரசன் இறப்பிற்கு நியாயம் வேண்டி உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.