கோயம்புத்தூர் மாவட்டம் வாரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்காக ஏக்கரில் வேளாண்மை நடைபெறுகிறது.
அப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட டைனமைட் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலைகள் இயங்கிவருகின்றன.
அந்த நிறுவனம் மூடப்பட உள்ள நிலையில் அதே இடத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான டெண்டரை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிப்காட் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அப்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் கௌதமனும் வந்தார். பின்னர் வாரப்பட்டிக்குச் செல்ல இருந்த அவரை காவல் துறையினர் விசாரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: பாஜக கல்யாண ராமனை கைது செய்க' - இஸ்லாமிய அமைப்பினர் புகார் மனு