கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியைச் சுற்றி களைகள் முளைத்து அடர்ந்த காடு போல் காணப்படுகிறது. அங்குள்ள சத்துணவு கூடத்தை நேற்று (செப்டம்பர் 11) இரவு இரண்டு மணியளவில் 16 யானைகள் கொண்ட கூட்டம் வைப்பு அறையை உடைத்து அரிசி, பருப்பு, சத்துணவு பாத்திரங்களை சேதப்படுத்தியது.
இதையறிந்த சத்துணவு ஊழியர்கள், உடனடியாக வனத்துறை எஸ்டேட் நிர்வாகத்திற்கும் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அலுவலர்கள் நேரில் பார்வையிட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த காட்டு யானைக் கூட்டத்தை வனத் துறையினர் உடனடியாக நேரில் வந்து பார்த்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.