கோவை மாவட்டம் வால்பாறை, சுற்று வட்டார பகுதிகளான சோலையார் அணை, பன்னிமேடு, நல்ல முடி பூஞ்சோலை, மூடீஸ், சின்ன கல்லார்,குரங்கு முடி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன.
இதையடுத்து இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் சின்கோனா எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர் ராஜ்குமார் என்பவர் வீட்டை இடித்து சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மேலும்,அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளததால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:
’மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை’ - திமுக எம்பி குற்றச்சாட்டு