கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்துவருவதால் நொய்யல் ஆற்றில் நீர் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர், சாக்கடை கழிவுநீர் கலப்பதால் நுரையுடன் கூடிய கருமை நிறமாக காட்சியளிக்கிறது.
மேலும் சாலையில் வருபவர்கள் மீது நுரை கலந்த சாக்கடை கழிவுநீர் மேலே விழுவதால் வாகனங்கள் ஓட்ட முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.