ETV Bharat / state

முன்னாள் சிறைவாசி மறுவாழ்வு பெற உணவகம் வைத்து கொடுத்த மருத்துவர்! - நீலகிரி

16 வருட சிறைவாசத்திற்குப் பின் விடுதலையானவர் மறுவாழ்வு பெறுவதற்கு முன்னாள் சிறைவாசிக்கு மருத்துவர் உணவகம் வைத்துக் கொடுத்துள்ளார்.

doctor helped open a restaurant to rehabilitate an ex prisoner
முன்னாள் சிறைவாசி மறுவாழ்வு பெற உணவகம் வைத்து கொடுத்த மருத்துவர்
author img

By

Published : Mar 1, 2023, 6:20 PM IST

முன்னாள் சிறைவாசி மறுவாழ்வு பெற உணவகம் வைத்து கொடுத்த மருத்துவர்

கோயம்புத்தூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர், லோகேந்திரன். இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வசந்தா என்ற மனைவியும் பிரவீன், பிரசாத் என இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் கடந்த 16 வருடங்களுக்கு முன் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஈஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட அடிதடி மோதலில், லோகேந்திரன் தள்ளியதில் ஈஸ்வரன் உயிரிழந்தார்.

இதனையடுத்து லோகேந்திரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் லோகேந்திரனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. லோகேந்திரன் சிறைக்கு செல்லும்போது அவரது இரண்டு மகன்களும் கை குழந்தைகளாக இருந்துள்ளனர்.

கணவன் சிறையில் அடைக்கப்பட்டதால் வசந்தா கைக்குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறை வாழ்க்கை முடிந்து, வெளியே வந்த லோகேந்திரன், அடுத்தது தனது வாழ்க்கையை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமலும், சிறை சென்றவர் எனக் கூறி புறக்கணிப்பார்களே என நினைத்து கவலைப்பட்டு பல நபர்களிடம் உதவி கேட்டு அணுகியுள்ளார்.

அப்படி நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலில் மேட்டுப்பாளையத்தில் உள்ள மருத்துவர் மகேஸ்வரன் என்பவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார். தனது குடும்ப நிலை, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றைக் கூறி பிழைப்பிற்காக லோகேந்திரன் தள்ளு வண்டி கடை ஒன்று வைக்க உதவிகேட்ட நிலையில், அவரது சூழ்நிலையை எண்ணியும், கொலை குற்றவாளியாக இருந்தும் மறுவாழ்வு பெற உழைக்க வேண்டும் என்ற அவரது நல்ல குணங்களை புரிந்த அந்த மருத்துவர் லோகேந்திரனுக்கு சிறிய ஹோட்டல் ஒன்றினையே வைத்துக் கொடுத்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில், அதற்காக இடத்தை தேர்வு செய்து, சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்து உணவகம் வைத்து கொடுத்துள்ளார். இன்று அந்த கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவர் மகேஸ்வரன் மற்றும் லோகேஸ்வரனின் குடும்பத்தார் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம்' - வேட்டைகார சமூக மக்கள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.