கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில், தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த இடத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சென்று பார்வையிட்டார். பின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் விஜய பிரபாகரன் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்;
' இந்தச் சம்பவத்திற்கு தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தடுப்புச் சுவர் குறித்து பொது மக்கள் புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாடு அரசு இறந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் அறிவித்தது வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, அரசாங்கம் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அத்திவரதர் போல் கேப்டன் வருவார்: விஜயகாந்த் மகன் பேட்டி