ETV Bharat / state

வருமான வரி வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தக்கோரிக்கை - தபெதிக ஆர்ப்பாட்டம் - Demonstration in Covai Periyar Dravidar Kazhagam

வருமான வரி வரம்பை ரூ.8 லட்சம் ஆக உயர்த்தக் கோரி கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் வருமான வரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 10:18 PM IST

கோவை: ஒன்றிய அரசு, உயர்சாதி ஏழைகள் என்பவர்களுக்கு அளவுகோலாக ஆண்டிற்கு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்து அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தது. ஆனால், ஒன்றிய அரசின் வருமான வரி செலுத்தும் வரம்பு ரூ.5 லட்சம் என வருமான வரித்துறை நிர்ணயம் செய்துள்ளது.

இதனைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் வருமான வரி வரம்பை அனைவருக்கும் ரூ.8 லட்சமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கோவை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு அதன் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் இன்று (நவ.16) கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

வருமான வரி வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை..கோவையில் தபெதிக ஆர்ப்பாட்டம்

இதில் ஆண்டிற்கு ரூ.8 லட்சம் சம்பாதிக்கும் உயர் சாதியினரை ஏழைகளாக அறிவித்ததைக் கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டது. பின் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கு.ராமகிருட்டிணன், 'மத்திய அரசின் அறிவிப்பால் உண்மையான ஏழைகள் பாதிக்கப்படுவார்கள். ஆண்டிற்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள், ஏழை என அறிவித்த நிலையில் அனைவருக்கும் வருமான வரி வரம்பு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்ய வேண்டும். மத்திய அரசின் இந்த தவறான செயலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அட்வைஸ் பண்ண ஆசிரியர் மண்டை உடைப்பு.. விழுப்புரம் பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.