கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயில் இருந்து, 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 41 ரூபாயில் இருந்து 44 ரூபாயாக நிர்ணயம் செய்து இரண்டுக்கும், மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்கத்தின் கோவை மாவட்டத்தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனமான தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் உள்ளிட்டவை விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனால் பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 விழுக்காடு உயர்த்தித்தர வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், பால் விலை உயர்வு தொடர்பாக முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்களை அழைத்துப்பேச வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: மக்கள் பயன்படுத்தும் பால் விலை உயர்த்தப்படவில்லை: அமைச்சர் நாசர்