ETV Bharat / state

வாங்கிய 2 மாதத்தில் 6 முறை பைக் சர்வீஸ்.. கடுப்பான கஸ்டமர் செய்த நூதன சம்பவம்! - latest news coimbatore

கோவையில் புதிதாக பைக் வாங்கி இரண்டு மாதத்தில் ஆறு முறை சர்வீஸ் செய்யும் நிலை ஏற்பட்டதால் கடுப்பாகி பைக்கை விட்டு சென்ற வாடிக்கையாளர்.

customer-left-the-bike-after-taking-it-for-service-several-times-within-2-months
அடிக்கடி பழுதானதால் பைக்கை வாங்கிய கடையிலே விட்டு சென்ற கஸ்டமர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:10 PM IST

அடிக்கடி பழுதானதால் பைக்கை வாங்கிய கடையிலே விட்டு சென்ற கஸ்டமர்

கோயம்புத்தூர்: கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாகீர். இவரது மகன் இப்ரான் துணி வியாபாரம் செய்து வருகிறார். தனது மகன் இப்ரானுக்கு பிடித்த 1 லட்சம் 98 ஆயிரம் மதிப்புள்ள புதிய பைக்கை கோவை அவிநாசி சாலை வ.உ.சி பூங்கா அருகே உள்ள தனியார் மோட்டார்ஸ் நிறுவனத்தில் கடந்த செப்டமர் மாதம் வாங்கி கொடுத்துள்ளார்.

பைக் வாங்கி இரண்டரை மாதங்கள் ஆகிய நிலையில் பைக் இன்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டு உள்ளது.பைக் எடுத்து தற்போது வரை வெறும் 1100 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டப்பட்டுள்ளது. இதனை பலமுறை சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாடிக்கையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பைக் எடுத்ததில் இருந்து ஆயில் கசிந்து கொண்டே இருப்பதாக ஆறு முறையும் சர்வீஸ் செய்துள்ளனர். ஒவ்வொரு 200 கிலோமீட்டர் ஓட்டும் போது பைக்கில் இருந்து ஆயில் கசிந்து கொண்டு இருக்கிறது என வாடிக்கையாளர் கூறுகிறார். அதேபோல பைக் எடுக்கும் பொழுது 45 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது வெறும் 20 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் வருவதாக வாடிக்கையாளர் தெரிவித்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த அவர்கள் பைக்கை தான் வாங்கிய தனியார் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இது குறித்து சுகுணா மோட்டார் நிர்வாகத்திடமும் மற்றும் ஹீரோ தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிகிறது.

தனது மகனுக்கு ஆசை ஆசையாய் வாங்கிய பைக்கில் பிரச்சனை ஏற்பட்டு அதற்கு தீர்வு கிடைக்காததால் மனம் நொந்து போன சாகீர் தனக்கு பைக் வேண்டாம் என்று மோட்டார் நிறுவனத்தில் வாகனத்தை விட்டு விட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து நிறுவனத்தில் சர்வீஸ் மேலாளர் செந்தில் குமார் வாடிக்கையாளரிடம் தான் மீண்டும் பைக்கை சரி செய்து தறுவதாக கூறியும் அதனை மறுத்துவிட்டு பைக் வேண்டாம் என்று கூறி அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் ஷோரும் வளாகம் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: இன்டர்ன்ஷிப் ஆட்தேர்வு முகாமில் புதிய உயரத்தை அடைந்த சென்னை ஐஐடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.