ETV Bharat / state

பாலிதீன் பைகள் பறிமுதல், காகிதப் பைகள் கொள்முதல்!

author img

By

Published : Aug 24, 2019, 10:20 AM IST

கோயம்புத்தூர்: கோபால்சாமி மலை அடிவாரத்தில் நடைபெற்ற உறியடி திருவிழாவிற்கு வந்த பக்தர்களிடம் வனத்துறையினர் பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து காகிதப் பைகளை வழங்கினர்.

பாலிதீன் பைகள் பறிமுதல் காகிதப் பைகள் கொள்முதல்

பொள்ளாச்சி அருகே உள்ள கோபால்சாமி மலை அடிவாரத்தில் உள்ள கோபால்சாமி கோவில், தாடகை நாச்சியம்மன் கோவில்களுக்கு அமாவாசை, பெளர்ணமி போன்ற விழாக்கால நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அங்கு உறியடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு பொள்ளாச்சி வனச்சரக பணியாளர்களும், இயற்கை வரலாறு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தினரும் இணைந்து இவ்விழாவுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து பாலிதீன் பைகள், வாட்டர் பாட்டில்கள், மது பாட்டில்கள், பீடி, சிகரெட் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து மாற்றுப் பொருளாக காகித பைகள், துணிப்பைகள் கொடுத்து கோயிலுக்கு அனுப்பிவைத்தனர்.

வனத்துறையினர் பாதுகாப்பு, Confiscation of polythene, கோபால்சாமி மலையில் கிருஷ்ண ஜெயந்தி,
பாலிதீன் பைகள் பறிமுதல் காகிதப் பைகள் கொள்முதல்,

இதுகுறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், பக்தர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பொருட்கள் வனப்பகுதியில் வீசப்படுவதால் வனவிலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இதைத் தவிர்க்கவும், பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காகிதப் பைகள், துணிப்பைகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்.

Intro:forestBody:forestConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள கோபால்சாமி மலை அடிவாரத்தில் கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு உறியடி திருவிழாவுக்கு வரும் பக்தர்களிடம் பாலிதீன் பைகள் வாட்டர் பாட்டில்கள் மது பாட்டில்கள் பீடி சிகரெட் போன்ற வனத்திற்கும் வன உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை பொள்ளாச்சி வனச்சரக பணியாளர்களும் இயற்கை வரலாறு அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தினரும் இணைந்து பறிமுதல் செய்து மாற்றுப் பொருளாக காகித பைகள் ,துணிப்பைகள் கொடுத்து கோயிலுக்கு அனுப்பப்பட்டனர். வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில் வனப்பகுதியில் உள்ள கோபால்சாமி கோவில், தாடகை நாச்சியம்மன் கோவில்களுக்கு அம்மாவாசை, பெளர்ணமி போன்ற விழாக்களா நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றன. தாங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர் போன்ற பொருட்கள் வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் இதை தவிர்க்க வலியுருத்திகாகித பைகள், துணிபைகள் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வழங்கப்பட்டன என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.