கரோனா வைரஸ் குறித்தும் அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இந்திய மருத்துவர் சங்க தமிழ்நாடு கிளைச் செயலாளர் டாக்டர் ரவிகுமார் கூறுகையில்,
"கரோனா வைரஸ் என்பது மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் தொற்று. இது, வைரஸ் தொற்று உள்ளவர்களின் இருமல், தும்மல் மூலம் வரும் நீர் துளைகளை சுவாசிக்கும் பொழுது மூக்கின் மூலம் அல்லது கண்களில் தேங்கி உள்ள அதிகப்படியான நீரின் மூலம் வைரஸ் தொற்று இல்லாதவர்கள் உடலினுள் செல்லும், இது பரவும் வேகம் மூன்று அடி தூரம், இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு தும்மும் பொழுதோ, இருமும் பொழுதோ கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும், முழங்கையினால் வாயை மூடிக்கொள்ள வேண்டும், குறைந்தது மூன்று மீட்டர் அளவிற்கு ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்
அனைவரும் முகக் கவசங்கள் அணியவேண்டும், ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வைரஸ் பரவும் வேகம் தடுக்கப்படும். காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்றவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி இந்த அறிகுறிகள் இல்லாமலும் இந்த தொற்றானது பரவக்கூடும் அதை 'A சிம்டமேடிக் கேரியர்ஸ்' என்பர், உலகத்தில் 20 முதல் 40 விழுக்காடு பேர் இதில் அடங்குகின்றனர். இவர்கள் தான் ஆபத்தான் மனிதர்களாக இருக்கின்றனர். அறிகுறிகள் தென்பட்டாலாவது மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அறிகுறிகள் இல்லாத பொழுது வைரஸ் தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 20 முதல் 40 விழுக்காடு பேர், 20 முதல் 40 வயதுடையவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம் A சிம்டமேட்டிக் கேரியர்ஸ் ஆக இருக்ககூடும். இந்த வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகளை மருத்துவ முறையில் R not என்று குறிப்பிடுவர்.
R not என்பது வைரஸ் இருப்பவரின் மூலம் மூன்றிலிருந்து ஏழு பேருக்கு வைரஸை பரப்ப முடியும். இதை R0 ஆக செய்தால்தான் வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்தியா தற்பொழுது இந்த வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பில் R2 நிலையில் உள்ளது. அதன்படி பார்க்கையில், வைரஸ் தொற்று உள்ளவர்கள் மூலம் இரண்டு பேருக்கு அதை பரவ செய்ய முடியும். இந்த R0என்ற நிலையை எட்ட வேண்டுமேயானால் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும்.
வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு ஒரு சிறந்த வழியாகும். தற்பொழுது இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவினால் கரோனா வைரஸ் பரவுவதும் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. இறப்பு விகிதமும் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது.
அதாவது காலை முதல் மதியம் வரை மக்களை வெளியில் செல்ல அனுமதி வழங்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு முழுமையாக ஊரடங்கை அமல்படுத்த வேண்டும், மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அரசு வீடுதோறும் வழங்கி உதவ வேண்டும். வைரஸுக்கான தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஆறு மாதம் ஆகும். அதுவரை மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கைக்குட்டைகளை உபயோகிக்க வேண்டும்.
ஊரடங்களில் இருந்து மீண்டு வர வேண்டுமேயானால் வைரஸ் தொற்று குறைவாக பாதித்த பகுதியை முதலில் ஊரடங்கில் இருந்து தளர்த்த வேண்டும். அதன்பின் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி வரவேண்டும். மருத்துவம், விவசாயம், உணவு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவற்றை பின்பற்றினால் பொருளாதார ரீதியில் இழப்பிலிருந்து முன்னேற முடியும்.
இதையும் பார்க்க: சரக்கு விமானத்தில் கொல்கத்தா பயணமா? - பிரசாந்த் கிஷோர் விளக்கம்