ETV Bharat / state

ஸ்டாலின் எத்தனை பகல் கனவு கண்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி

கோயம்புத்தூர்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட டெண்டரில் தான் முறைக்கேடு செய்யதாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். மக்களை மூளை சலவை செய்து வாக்குகளை பெற திமுக முயற்சித்து வருகிறது. மக்கள் ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

Chief Minister Palanisami
Chief Minister Palanisami
author img

By

Published : Apr 1, 2021, 10:37 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கொடிசியா மைதானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே வானதி சீனிவாசன் தூதுவராக செயல்படுவார். 234 தொகுதிகளிலும் வென்றுவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். மு.க ஸ்டாலின் எத்தனை பகல் கனவு கண்டாலும் அதிமுகவை அழிக்க முடியாது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் நூறு விழுக்காடு வெற்றிப் பெறும் என நம்பிக்கை உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட டெண்டரில் தான் முறைக்கேடு செய்யதாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். மக்களை மூளை சலவை செய்து வாக்குகளை பெற திமுக முயற்சித்து வருகிறது. மக்கள் ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.

பிரதமர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து இகழ்ந்து பேசும் தயாநிதிமாறன் பேன்றவர்கள் இந்த தேர்தலுடன் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும். அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளது. பெண்கள் பாதுகாப்பாக வாழ அதிமுக ஆட்சி தொடர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.