ETV Bharat / state

தேர்தல் பரப்புரையின்போது பாஜக கட்சியினரிடையே வாக்குவாதம் - Lokshabha election 2019

கோவை: அன்னூரில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசனின் தேர்தல் பரப்புரையின்போது, உச்சி வெயில் தாங்க முடியாமல் நிழலை தேடி அருகேயிருந்த விருந்தினர் மாளிகைக்கு சென்றவர்களை வெளியேற்றி கேட்டினை கட்சியினர் பூட்டி வைத்ததால் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ILA ganesan election campaign in annur
author img

By

Published : Apr 15, 2019, 11:59 PM IST

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக இன்று காலை 11.30 மணியளவிலிருந்து பாஜக, அதிமுக தொண்டர்கள் காத்திருந்தனர். வெயில் கூடிக்கொண்டே சென்ற நிலையில், இல.கணேசன் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. மதியம் 1 மணியளவில் இல.கணேசன் பேசத் தொடங்கினார்.

அன்னூரில் பாஜக எம்பி இல.கணேசனின் தேர்தல் பரப்புரை

உச்சி வெயிலைத் தாங்க முடியாமல் கூடியிருந்த கூட்டம் கலையத் தொடங்கியது. நாளிதழ்கள், கட்சி கொடிகளை தலையில் வைத்தப்படி பலர் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியினர் நிழலுக்காக அருகேயிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்குள் சென்று மரத்தடியில் அமர்ந்தனர். தலைவர் பேச்சை கேட்காமல் நிழலுக்காக விருந்தினர் மாளிகைக்குள் செல்வதை பார்த்த கட்சி நிர்வாகிகள், உள்ளேயிருந்தவர்களை வெளியேற்றி கேட்டினை பூட்டி வைத்தனர்.

இதனால் பாஜக நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்த தொண்டர்கள், மீண்டும் திறக்கும்படி சொன்னதால் விருந்தினர் மாளிகை கேட் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தின் ஒரு பகுதியினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் நிழலில் இருந்தபடி இல.கணேசன் பேச்சைக் கேட்டனர்.

சு.சீனிவாசன்.     கோவை

கோவை மாவட்டம் அன்னூரில் பாஜக எம்பி இல.கணேசன் பரப்புரையின் போது, உச்சி வெயில் தாங்க முடியாமல் நிழலை தேடி அருகேயிருந்த விருந்தினர் மாளிகைக்கு சென்றவர்களை வெளியேற்றி கேட்டினை கட்சியினர் பூட்டி வைத்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் பேசுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக காலை 11.30 மணியளவில் இருந்து பாஜக, அதிமுக தொண்டர்கள் காத்திருந்தனர். வெயில் கூடிக்கொண்டே சென்ற நிலையில், இல.கணேசன் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. மதியம் 1 மணியளவில் இல.கணேசன் பேசத்துவங்கினார். உச்சி வெயிலை தங்க முடியாமல் கூடியிருந்த கூட்டம் கலைய துவங்கியது. நாளிதழ்கள், கட்சி கொடிகளை தலையில் வைத்தப்படி பலர் பேச்சை கொண்டு கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியினர் நிழலுக்காக அருகேயிருந்த அரசு விருந்தினர் மாளிகைக்குள் சென்று மரத்தடியில் அமர்ந்தனர். தலைவர் பேச்சை கேட்காமல் நிழலுக்காக விருந்தினர் மாளிகைக்குள் செல்வதை பார்த்த கட்சி நிர்வாகிகள், உள்ளேயிருந்தவர்களை வெளியேற்றி கேட்டினை பூட்டி வைத்தனர். இதனால் பாஜக நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்த தொண்டர்கள், மீண்டும் திறக்கும்படி சொன்னதால் விருந்தினர் மாளிகை கேட் திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து கூட்டத்தின் ஒரு பகுதியினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் நிழலில்  இருந்தபடி இல.கணேசன் பேச்சை கேட்டனர்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.