கோவை மாவட்டத்தில் இரண்டு மாடுகள் சண்டியிட்டுக் கொண்டன. பொதுமக்களின் பல இடையூறுகளையும் தாண்டி இரு மாடுகளும் ஒன்றை ஒன்று முட்டியபடி பல மணி நேரமாக தங்களுக்குள் பலப்பரிட்சை மேற்கொண்டன.
பொதுமக்களில் சிலர் அவற்றை விரட்ட, தண்ணீரை எடுத்து ஊற்றியும், பிரம்பால் அடித்தும் எவ்வளவோ முயன்றனர். ஆனால் அந்த மாடுகளோ எதற்கும் அசராமல் தொடர்ந்து சண்டையிட்டன. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.